×

அரை நிர்வாண படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்: குவியும் கண்டனம்

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ள அரை நிர்வாண படத்திற்கு கடும் கண்டனம் குவிந்து வருகிறது. நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தற்போது பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் இல்லை. தமிழில் அவர் கடைசியாக நடித்த லாபம் படம் வெற்றியடையவில்லை. தற்போது தெலுங்கில் அவர் நடித்து வரும் சலார் என்கிற படம் மட்டுமே கைவசம் உள்ளது. இந்த நிலையில் அவர் சமூக வலைத்தள பக்கங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவரது இரண்டாவது காதலரும், டாட்டூ கலைஞருமான சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் காதலனை யானை போன்று முதுகில் சுமக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார். இந்நிலையில் தற்போது தனது டாப்லெஸ் படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனது முதுகில் ஷ்ருதி என்று எழுதியிருக்கிறார். அதோடு எனது பெயரை சத்தமாக படியுங்கள் என்று கூறியிருக்கிறார். இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சினிமா வாய்ப்புகள் குறைவதால் இன்ஸ்டாகிராமில் பரபரப்புக்காக படங்களை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஸ்ருதிஹாசன் திசை திருப்புவதாக குற்றம்சாட்டி வருகிறார்கள்….

The post அரை நிர்வாண படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்: குவியும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Shruti Haasan ,Chennai ,
× RELATED ஸ்ருதிஹாசனை பிரிந்தது ஏன்? சாந்தனு ஹசாரிகா பேட்டி