×

மதுரையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தூங்கி கொண்டிருந்த கணவன் – மனைவி தீயில் கருகி உயிரிழப்பு

மதுரை: மதுரையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தூங்கி கொண்டிருந்த கணவன் – மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை ஆனையூர் அருகேயுள்ளது எஸ்.பி.பி நகர். இந்த பகுதியில் உள்ள குடியிருப்பில் சக்தி கண்ணன் மற்றும் அவரின் மனைவி இருவரும் தங்களது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மாடியில் இருந்து கரும்புகை வெளியே வந்திருப்பதை பக்கத்து வீட்டில் இருப்பவர்களும் வீட்டின் கீழே படுத்து தூங்கி கொண்டிருந்த அவரின் குழந்தைகளும் பார்த்துள்ளனர்.உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைவாக செயல்பட்டு மாடியில் உள்ள அந்த அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சக்தி கண்ணன் மற்றும் அவரின் மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்திருப்பது தேசிய வந்தது.இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்தி கண்ணன் இதே பகுதியில் தொழில் செய்து வருகிறார். கணவன் மனைவி இரண்டு பேரும் தீ விபத்தில் உயிரிழந்திருப்பது இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post மதுரையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தூங்கி கொண்டிருந்த கணவன் – மனைவி தீயில் கருகி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Maduram ,Y.C. Madurai ,Madurai ,Madurayulu ,RC ,Yakaran ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!