×

கேரளா உட்பட 5 உயர் நீதிமன்றத்துக்கு 9 நீதிபதிகள் நியமனம்

புதுடெல்லி: கேரளா உட்பட 5 உயர் நீதிமன்றங்களுக்கு 9 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழு பல மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க பெயர்களை பரிந்துரை செய்து வருகிறது. அதன்படி, படிப்படியாக நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், 5 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு 9 நீதிபதிகள் நேற்று நியமிக்கப்பட்டனர். இவர்களில்  7 பேர் நீதித்துறை அதிகாரிகள், 2 பேர் வக்கீல்களாக பணியாற்றி வந்தவர்கள். இவர்களில் 4 பேர்  ஜார்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும், 2 பேர் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், கேரளா மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலா ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டு உள்ளனர். …

The post கேரளா உட்பட 5 உயர் நீதிமன்றத்துக்கு 9 நீதிபதிகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,New Delhi ,Supreme Court Collegium Committee ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு