×

பாகிஸ்தானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்…ரிக்டர் அளவுகோலில் 6.0-ஆக பதிவு.: 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின், ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 3.30-க்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 6.0-ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலக்கடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் பல இடிந்து விழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நில நடுக்கத்தின் தாக்கம் காரணமாக சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இந்தநிலையில், 200-க்கும் அதிகமானோர் கட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் குறித்து முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது….

The post பாகிஸ்தானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்…ரிக்டர் அளவுகோலில் 6.0-ஆக பதிவு.: 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Pakistan ,east ,Harnai, Balochistan province, Pakistan ,Dinakaran ,
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...