×

காட்பாடி வழியாக பெங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2வது நாளாக ரயில்வே போலீசார் வேட்டை

வேலூர்: காட்பாடி வழியாக பெங்களூரு சென்ற புவனேஷ்வர்-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே போலீசார் நேற்று அதிகாலை பறிமுதல் செய்தனர். காட்பாடி ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்த, மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு யஷ்வந்த்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் இருக்கைகளுக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையில் 8 பொட்டலங்களாக கட்டப்பட்ட 14 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.இதைதொடர்ந்து 2வது நாளாக நேற்று அதிகாலையும் காட்பாடி ரயில்வே போலீசார் காட்பாடி ரயில் நிலையத்தில் நின்று சென்ற ரயில்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் அதிகாலை 4.20 மணிக்கு ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இருந்து கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் டி1 கோச்சில் நடத்திய சோதனையில் பயணிகளின் இருக்கைகளுக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பைகளில் 10 பொட்டலங்களாக கட்டப்பட்டிருந்த 21 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது குறித்து காட்பாடி ரயில்வே போலீசார், வழக்குப்பதிந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்….

The post காட்பாடி வழியாக பெங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2வது நாளாக ரயில்வே போலீசார் வேட்டை appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Gadbadi ,Vellore ,Bhubaneshwar ,Bangalore ,Railway ,Dinakaran ,
× RELATED ₹3 லட்சம் வாங்கிக்கொண்டு மிரட்டும்...