×

நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தண்ணீர், உணவுக்காக அலையும் குரங்குகள்-குடிநீர்தொட்டி அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நெமிலி : நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தண்ணீர், உணவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைக்குகளில் உள்ள டேங்க் கவரை பிரித்து அதிலிருந்து தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு பொருட்களை எடுத்து குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.நெமிலியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிறை மரங்கள் உள்ளது. இந்நிலையில் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட தினமும் வந்து சுற்றித்திரிந்து மரங்களின் மீது ஏறி தாவிகுதித்து செல்வது வழக்கம். அவ்வாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு தங்கள் பணிகளுக்காக சென்று வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வரும் குரங்குகள் பொதுமக்கள் நிறுத்திவைத்துள்ள வாகனங்களின் டேங்க் கவரை பிரித்து அதில் தங்களுக்கு சாப்பிட தேவையான தண்ணீர், உணவு பொருட்கள் உள்ளனவா என பிரித்து அதில் தண்ணீர் பாட்டிலை எடுத்து தாகத்தை தீர்த்துக்கொள்கின்றன. மேலும் தின்பண்டங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் இருந்தாலும் அதனையும் விட்டுவைப்பதில்லை. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குரங்குகள் அதன் பசிக்காக அலுவலகத்திற்கு வரக்கூடிய நபர்களின்  வாகனங்களில் ஏதேனும் உணவு பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள்   உள்ளதா  என டேங்க் கவர்களை பிரித்து பார்க்கின்றது. பின்னர் பொதுமக்களின் பொருட்களை எடுத்துச் சென்றுவிடுகிறது. எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளின்  நலனை கருதி குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தண்ணீர், உணவுக்காக அலையும் குரங்குகள்-குடிநீர்தொட்டி அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nemilly Pavement Union ,Nemili ,Nemili Pavement Union ,
× RELATED பிளஸ் 2 தேர்வில் ஒன்றாக தேர்ச்சி தாய், மகள் கல்லூரியில் சேர முடிவு