×

ஆன்லைனில் வேலைக்கு பதிவு செய்தவரை இன்டர்வியூவிற்கு அழைத்து செயின், செல்போன் பறிப்பு

சென்னை: சென்னை மின்ட், மாடர்ன் சிட்டி, 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நூர்ஜஹான் (25). இவர், வேலைக்காக ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் அவரை செல்போனில் தொடர்புகொண்ட வினோத்குமார் என்பவர், உங்களுக்கு வேலை தயாராக உள்ளது. இன்டர்வியூவிற்கு போக வேண்டும். எனவே, ராயப்பேட்டை, லூயிஸ் சாலைக்கு பிற்பகல் 3 மணிக்குள் வந்து விடுங்கள், என கூறியுள்ளார். அதன்படி, நூர்ஜஹான் தனது கல்வி சான்றிதழ்களுடன் சென்றுள்ளார். அப்போது, இன்டர்வியூவிற்கு போகும் போது செயின், செல்போன் எல்லாம் எடுத்து போக கூடாது. அதை என்னிடம் கொடுங்கள். லாக்கரில் வைத்து விட்டு வருகிறேன். இன்டர்வியூ முடிந்ததும், மீண்டும் உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன், என்று நூர்ஜஹானிடம் அந்த நபர் கூறியுள்ளார். அதன்படி, தனது இரண்டரை சவரன் ெசயின், செல்போன், புளூடூத் ஹெட்செட் ஆகியவற்றை அந்த நபரிடம் நூர்ஜஹான் கொடுத்துள்ளார். அதை வாங்கிக் கொண்டு இங்கேயே இருங்கள். சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று கூறி லாயிட்ஸ் காலனி அரசு அலுவலர் குடியிருப்புக்குள் அந்த நபர் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகமடைந்து, அவரை தேடியபோது, அவர் மாயமானது தெரிந்தது. இதுப்றறி ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்து வருகின்றனர்….

The post ஆன்லைனில் வேலைக்கு பதிவு செய்தவரை இன்டர்வியூவிற்கு அழைத்து செயின், செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Noorjahan ,5th Cross Street, Modern City, Chennai Mint ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...