நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகில் இளங்கார்குடி கிராமத்தில் முன்னோடி இயற்கை விவசாயியும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் வயலில் தஞ்சாவூர் வேளாண் கல்லூரி 4ம் ஆண்டு மாணவிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த முக்கியத்துவத்தையும் சிறப்புகளையும், அத்தியாவசியத்தையும் விளக்கிக் கூறினார்.மேலும் நாட்டு காய்கறிகளையும், நாட்டு மாடு வகைகளையும் அதன் சிறப்புகளையும் மற்றும் மாவட்டத்தில் புதுமையாக ஏலக்காய், ஜாதிக்காய், பட்டை, சிவப்பு நெல்லி, மிளகு போன்ற அரிய வகை செடி, மர வகைகள் குறித்தும் மாணவிகளுக்கு விளக்கி கூறினார். இறுதியாக மாணவிகள் கூறுகையில் இதுவரை இதுபோன்ற ஒரு சிறப்பான அனுபவம் எங்களுக்கு கிடைத்ததில்லை எங்களது பல்கலைக்கழகத்தில் கிடைக்காத ஒரு அனுபவம் செயல்முறையாக நேரடியாக எங்களால் பார்க்க முடிந்தது என்று பெருமிதம் கொண்டு அனைவரும் நன்றி கூறினார்கள். ரிஷியூர் இயற்கை விவசாயி செந்தில் உமையரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….
The post கொரடாச்சேரி அருகில் இளங்கார்குடியில் வேளாண். கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை விவசாய செயல் விளக்கம் appeared first on Dinakaran.