×

ஆபாச பேச்சு… காம சேட்டைகளுடன் இளம்பெண்ணுடன் நிர்வாண கோலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொஞ்சல்: அம்பலமாகும் அந்தரங்க விஷயங்கள்

திருக்கழுக்குன்றம்: வாட்ஸ் அப் வீடியோ காலில் இளம்பெண்ணுடன் நிர்வாண கோலத்தில் கொஞ்சலுடன் பேசிய திருக்கழுக்குன்றம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டிலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் ஆபாசமாக பேசுவதும் காமசேட்டைகள் செய்வதும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்தில் சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்தவர் முனிசேகர் (50). இவர் ஒரு வாரத்துக்கு  முன் திடீரென இரவோடு இரவாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த விஷயம் முனிசேகருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இதற்கான எந்த காரணமும் தெரியாததால் அவருடன் பணியாற்றும் போலீஸ்காரர்களும் செய்வதறியாது திகைத்தனர். இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது ஒருவர் கொடுத்த புகார் வாட்ஸ் அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.  அந்த புகாரை டிஜிபி மற்றும் வடக்கு மண்டல ஐஜி, செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு அனுப்பியவர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் அஸ்ரப் அன்சாரி (38) என்று தெரியவந்துள்ளது. அவர் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது; என் மனைவியின் சகோதரி திருக்கழுக்குன்றம் அருகே நெல்வாய் கிராமத்தில் வசித்து வருகின்றார். அங்கு என் மனைவி அடிக்கடி சென்றுவந்தபிறகு அவரது நடத்தையிலும் பேச்சிலும் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டது. மேலும் அவர் என்னை புறக்கணிக்க துவங்கியதால் எங்களிடம் பிரச்னை ஆரம்பித்தது. இதனால் சந்தேகம் அடைந்த நான், 2 மாதங்களுக்கு முன் மனைவியின் செல்போனை வாங்கி பார்த்தேன். அதில் திருக்கழுக்குன்றம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முனிசேகர், என் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. மேலும் இன்ஸ்பெக்டர், வாட்ஸ் அப் வீடியோ காலில் நிர்வாண நிலையில் பேசுவதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். மனைவியிடம் கேட்டபோது சரியான பதில் கூறவில்லை. இதனால் எங்களிடையே பிரச்னை ஏற்பட்டபோது மனைவி குழந்தைகளுடன் நெல்வாய் கிராமத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்று தங்கிவிட்டார். இதன்பிறகு இன்ஸ்பெக்டர் முனிசேகரை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது முறையான பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து பேசி விவரம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் என்னையும் குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டினார். மனைவியை அபகரித்ததுடன் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது காவல்துறை உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இன்ஸ்பெக்டர் முனிசேகர் வாட்ஸ் அப் வீடியோ காலில்  நிர்வாண கோலத்தில் பேசுவது வாட்ஸ் அப்பில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொறுப்புள்ள ஒரு அதிகாரி, இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ஆபாசமாக பேசியும் நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்திருப்பதும் மக்களிடையே பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்ஸ்பெக்டர் சம்பந்தமாக பல அந்தரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

The post ஆபாச பேச்சு… காம சேட்டைகளுடன் இளம்பெண்ணுடன் நிர்வாண கோலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொஞ்சல்: அம்பலமாகும் அந்தரங்க விஷயங்கள் appeared first on Dinakaran.

Tags : Konchal ,Thirukkallukkunram ,
× RELATED திருக்கழுக்குன்றத்தில் திமுக வேட்பாளர் பிரசாரம்