×

நாட்டிலேயே முதன்முறையாக பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை: சிக்கிம் அரசு அதிரடி அறிவிப்பு

கேங்டாக்: நாட்டிலேயே பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டர் கேன்களுக்கு ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படுவதாக சிக்கிம் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிக்கிம் முதல்வர் பி.எஸ்.தமாங், ஆளுநர் கங்கா பிரசாத்துடன் இணைந்து கழிவுகளை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்ேபாது, முதல்வர் பி.எஸ்.தமாங் கூறுகையில், ‘சிக்கிம் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் குடிநீர் கேன்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்படும். இந்த தடை 2022ம் ஆண்டு ஜனவரி முதல் அமலாகும். வெளி மாநிலங்களில் இருந்து சிக்கிம் வரக்கூடிய பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் சப்ளையை தடுத்து நிறுத்த சிக்கிம் அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இமாலய மலைத்தொடரில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலமானது, சுத்தமான, தரமான குடிநீரை வழங்கும் இயற்கை வளங்களால் ஆசீர்வாதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பாட்டில் நீரை விட சிக்கிமில் கிடைக்கும் இயற்கையான நீர் சுகாதாரமானது. தடை அமலுக்கு வர இன்னும் மூன்று மாதங்கள் அவசாகம் இருக்கிறது. இந்த காலகட்டத்துக்குள் மினரல் வாட்டர் தொழில் நிறுவனங்கள், கடைகள் தங்கள் கையிருப்பில் இருக்கக் கூடிய மினரல் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்தி காலி செய்க்து விட வேண்டும்’ என்றார். சிக்கிமின் முக்கிய சுற்றுலா தலமான லாச்சனில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலத்தடி நீர் கிடைக்கக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூட பிளாஸ்டிக் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ள நிலையில், நாட்டிலேயே முன் மாதிரியாக முதன் முறையாக பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு சிக்கிம் அரசு தடை விதித்து இருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்….

The post நாட்டிலேயே முதன்முறையாக பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை: சிக்கிம் அரசு அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sikkim Government ,Gangtok ,Sikkim ,Dinakaran ,
× RELATED சிக்கிம், அருணாச்சலப் பிரதேச...