×

அடியாட்களை ஏவி மகனை கடத்திய தாய்

தாம்பரம்: குரோம்பேட்டையை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (29). இவரது மனைவி சையத் அலி பாத்திமா (26). கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகன் முகமது சித்திக் (8), குரோம்பேட்டையில் தந்தையுடன் வசித்து வருகிறான். இச்சிறுவன் நேற்று முன்தினம் திடீரென மாயமானான்.  போலீசார் விசாரணையில், சையத் அலி பாத்திமா தனது மகனை கடத்தி வர 2 அடியாட்களை அனுப்பியுள்ளார். அதன்படி, அவர்கள் சித்திக்கை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. விழுப்புரம் அருகே சிறுவனை மீட்ட போலீசார், இது தொடர்பாக, இருவரை கைது செய்தனர். …

The post அடியாட்களை ஏவி மகனை கடத்திய தாய் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Mohammed Ismail ,Crompettai ,Syed Ali Fatima ,
× RELATED குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர்...