×

சர்வதேச தரத்தில் அடிப்படை கட்டமைப்பு ரூ.500 கோடி ஒதுக்கீட்டில் சிங்கார சென்னை 2.0: தமிழக அரசு ஆணை வெளியீடு

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சென்னை முழுவதும் சுத்தம் மற்றும் பசுமையை ஏற்படுத்துதல், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வசதி செய்து தருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. இந்த திட்டத்துடன் வேறு பல திட்டங்களையும் இணைத்து பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது….

The post சர்வதேச தரத்தில் அடிப்படை கட்டமைப்பு ரூ.500 கோடி ஒதுக்கீட்டில் சிங்கார சென்னை 2.0: தமிழக அரசு ஆணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Government ,Tamil Nadu Municipal Administration and Drinking Water Supply Department ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...