×

மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளருடன் கலந்துரையாடல்; தொழில்துறை ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும்: ஆத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சேலம்: புதிய தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் மாறி வரும் நிலையில், ெதாழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தை பிடிக்கும் என்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் சேகோ ஆலையில் மரவள்ளி விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளர் அருண்ராய் வரவேற்றார்.  தொடர்ந்து சேலம் சேகோசர்வ் ஆலையில், புதிதாக ₹1.60 கோடியில் கட்டப்பட்ட மின் ஏல மைய கட்டிடத்தையும், நேரடி விற்பனை முனைய கட்டிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மரவள்ளி கிழங்கு விவசாயம், ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் தொழில்துறை வளம் பெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக தேர்தல் நேரத்தில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கினோம். அவற்றில், 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி முடித்துள்ளோம். மக்களுடைய கருத்துகளை கேட்டு, அவர்களின் உணர்வுகளை புரிந்து அதற்கு ஏற்ற வகையில் இந்த மக்களின் அரசு நடக்கிறது. மிக முக்கியமாக சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறோம். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத நிலையில், வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளோம். ஜவ்வரிசி உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உற்பத்தியாகும் ஜவ்வரிசிக்கு உரிய விலை கிடைக்கவும், கலப்படத்தை கண்காணிக்க குழு அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளீர்கள். இக்கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றித்தரப்படும்.  திமுக ஆட்சி அமைந்த இந்த 4 மாதத்தில் தொழில்துறை புத்துணர்வு அடைந்துள்ளது. குறிப்பாக 2 முக்கிய மாநாடுகளை நடத்தியுள்ளோம். சென்னையில் நடந்த மாநாட்டில் 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ₹17,141 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. 2வது மாநாட்டின் மூலம் ₹2,180 கோடி மதிப்பிலான 25 புதிய திட்டங்களுக்கான புரிந்துணைர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்மூலம் 42,145 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இப்படி பல்வேறு நிறுவனங்களை தொடங்கவுள்ளோம். ₹1.93 லட்சம் கோடி ஏற்றுமதியோடு, இந்தியாவிலேயே 3வது பெரிய ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் விளங்கிக்கொண்டிருக்கிறது. 3வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு ஏற்றுமதியை கொண்டு வருவதுதான் ஆட்சியின் லட்சியமாக அமைந்திருக்கிறது. அதற்காக தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கையை வௌியிட்டுள்ளோம். மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர ஏற்றுமதி கையேட்டையும் வெளியிட்டுள்ளோம். திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, பொள்ளாச்சி, சென்னை, கோவை மற்றும் ஓசூர் ஆகிய 10 ஏற்றுமதி மையங்கள் மேம்படுத்தப்படுகிறது. இதன்மூலம் உற்பத்தி பொருட்கள் அதிகமாகும். ஏற்றுமதி பொருட்களும் அதிகரிக்கும். நகரம், கிராமம் என்ற வேறுபாடு கிடையாது. அந்த மாவட்டம், இந்த மாவட்டம், அந்த ெதாழில், இந்த தொழில், பெரும் தொழில், சிறு ெதாழில் நிறுவனம் என்ற பேதமில்லை என்றே தமிழ்நாடு அரசு தொழில் கொள்கையை வகுத்து வைத்துள்ளது. அதனால், தொழில்துறையினரும் அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க கேட்டுக்கொள்கிறேன். ஜவ்வரிசி தொழிலில் இந்தியாவிலேயே முன்னோடியாக விளங்கும் சேலம் மாவட்டத்தை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள். இதை நிறைவேற்ற மரவள்ளி விவசாயிகளும், ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். இது எனது அரசு அல்ல, நமது அரசு, அதுவும் மக்களின் அரசு. ஆகவே அனைவரும் தொழில் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தாருங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜவ்வரிசி ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து எப்படி ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை பார்வையிட்டார். போலீஸ் ஸ்டேஷனில் முதல்வர் திடீர் ஆய்வுதர்மபுரி மாவட்டத்தில் இன்று நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு நேற்று இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டார். அப்போது நல்லம்பள்ளி அடுத்த அதியமான்கோட்டையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு திடீரென சென்றார். அங்கு முதல்வர் கலைஞரால் கடந்த 10.8.1998ல் திறந்து வைத்த கல்வெட்டை பார்வையிட்டார். பின்னர் சப்.இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர்ந்தார். இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் பெண் போலீசாரிடம் ஏதேனும் குறைகள் உள்ளதா என்றும், தேவையான போலீசார் உள்ளனரா என்றும் கேட்டறிந்தார். தினசரி நடக்கக்கூடிய பொதுநாள் குறிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தார்.புகார் மனுக்கள் குறித்து எப்படி நடவடிக்ைக எடுக்கிறீர்கள் என விசாரித்தார். தங்களுக்கு இப்போது குறைகள் எதுவும் இல்லை. போலீசாரும் வாரம் ஒரு முறை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என நீங்கள் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தனர். அங்கு 10 நிமிடங்கள் ஆய்வு செய்தபின் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் குடும்பத்தினர் மற்றும் சிறுமிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். சிறுவர்கள், விளையாட்டுப் பூங்கா வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அது விரைவில் நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்.சேலத்தில்ஹெலிகாப்டர் தயாரிக்க வாய்ப்பு: முதல்வர் தகவல்சேலம் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சென்னை, ஓசூர், சேலம், கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களை உள்ளடக்கி ஒன்றிய அரசால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ராணுவத்தளவாட தொழில் உற்பத்தித்தடத்தில் சேலம் ஒரு முக்கிய முனையமாக விளங்கிக்கொண்டிருக்கிறது. பாராசூட் துணிகள், ராணுவ சீருடைத்துணிகள் போன்ற நுட்பமிகு துணிகளை தயாரிக்கவும், ஹெலிகாப்டர் பாகங்களை ஒன்றாக பொருத்தவும் சேலத்தில் அதிகமான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார்….

The post மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளருடன் கலந்துரையாடல்; தொழில்துறை ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும்: ஆத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : Cassavalli Farmers ,Javarisi ,Tamil Nadu ,Aathur ,Chief Minister ,BC ,G.K. Stalin ,Salem ,Atur ,B.C. ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...