×

மம்தா போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு: துணை ராணுவம் குவிப்பு

கொல்கத்தா: நாடு முழுவதும் 3 மக்களவை தொகுதிகள், 30 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், மேற்கு வங்கத்தில் உள்ள பவானிபூர் தொகுதியில் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் இவர் தோற்றார். ஆனாலும், தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வென்றதால் மீண்டும் முதல்வராகி உள்ள மம்தா, 6 மாதத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டியது அவசியமாகும்.இதன்படி, பவானிபூர் வெற்றி மம்தாவுக்கு அவசியம் என்பதால் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவரை எதிர்த்து பாஜ சார்பில் பெண் வக்கீல் பிரியங்கா திப்ரிவால் களமிறங்கி உள்ளார். காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால், மம்தா-பாஜ இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வாக்குப்பதிவில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க, பவானிபூர் தொகுதியில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு்ள்ளது. …

The post மம்தா போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு: துணை ராணுவம் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bhawanipur ,Mamata ,Kolkata ,3 Lok Sabha ,West Bengal ,Bhavanipur ,Dinakaran ,
× RELATED சந்தேஷ்காலியில் வெடிபொருள்...