×

மூச்சுத்திணறலால் நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு

* உறவினர்கள் சாலை மறியல்* திருவள்ளூரில் பரபரப்புதிருவள்ளுர்: திருவள்ளுர் அடுத்த புதூர் மேடு காலனி பகுதியைச் சேர்ந்தவர்  நந்தகுமார் (27). இவருக்கும் கடம்பத்தூர் தேவி குப்பத்தை சேர்ந்த லாவண்யா (25 ) என்பவருக்கும் ஒன்றரை வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் 2 பேரும் பெரும்புதூர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். தற்போது லாவண்யா 9 மாத கர்ப்பிணி.  அவருக்கு நாளை வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர் கடந்த 90 நாட்களுக்கு முன்பு முதல் தவணை கொரோன தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் ராமஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற முகாமில் 2 வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் லாவண்யாவிற்கு மூச்சுத் திணறல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அவரது உறவினர்கள் பட்டரைபெருமந்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் ஜெயஜோதி என்பவர் லாவண்யாவிற்கு ஊசியை செலுத்தி சிறிது நேரம் உட்கார வைத்துள்ளார். இந்நிலையில் லாவண்யாவிற்கு மூச்சுத்திணறல் சரியாகவே வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். மீண்டும் லாவண்யாவிற்கு  நேற்று விடியற்காலை 1.30 மணி அதிக அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது உறவினர்கள் பட்டரைபெருமந்தூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஜெயஜோதியை தொடர்புகொண்டு அதிக அளவில் மூச்சுத்திணறல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கு செவிலியர் ஜெயஜோதி உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். அவரை ஒரு ஆட்டோவில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் லாவண்யாவை பரிசோதனை செய்து பார்த்தபோது வரும் வழியிலேயை லாவண்யா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு 2 வது தவணை தடுப்பூசி செலுத்தியதால் தான் உயிரிழந்திருக்கலாம் என லாவண்யாவின் தந்தை விஜயகுமார் கனகம்மாசத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அவருடைய மரணத்தை முறையாக உடற்கூறு ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவருடைய உறவினர்கள் திருவள்ளுர் ஆர்டிஓ பரமேஸ்வரியிடம் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து உடற்கூறு ஆய்வு செய்ய கால தாமதம் ஆனதால் அவருடைய உறவினர்கள் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனை எதிரே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன்,  வட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.உறவினர்கள் குற்றச்சாட்டுகர்ப்பிணிப் பெண் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் தான்  உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டுக்கு மருத்துவ குழு அமைக்கப்பட்டு முறையாக விசாரணை மேற்கொள்ளப்படும். உடற்கூறு ஆய்வு செய்த ஆய்வறிக்கையை நோய்த் தடுப்புக்குப் பிந்தைய பக்கவிளைவுகளுக்கான தேசிய ஆய்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். அவர் எதனால் உயிரிழந்தார் என்பது தொடர்பாக ஆய்வு குழு  அறிவிக்கும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.செவிலியர் தற்காலிக பணி நீக்கம்மூச்சுத்திணறலால் உயிரிழந்த கர்ப்பிணி பெண் லாவண்யாவை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரை செய்யாத காரணத்தால்  கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பட்டரைபெருமந்தூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது துறை ரிதீயான நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சுகாதார துறை துணை இயக்குநர் ஜவஹர்லால் பட்டரைபெருமந்தூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஜெயஜோதியை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.உடற்கூறு ஆய்வுநிறை மாத கர்ப்பிணிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால்தான் உயிரிழந்தாரா என உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிறகு அவர் மரணம் தொடர்பாக முழுமையான தகவல் அளிக்கப்படும் என திருவள்ளூர் மருத்துவமனை முதல்வர் அரசி தெரிவித்தார்….

The post மூச்சுத்திணறலால் நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Pudur Madu ,Nandakumar ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி