சாத்தூர், ராஜபாளையத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சாத்தூர், மார்ச் 28: ராகுல் காந்தியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, சாத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சாத்தூர் முக்குராந்தலில் பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜோதி நிவாஸ், நகர் தலைவர் அய்யப்பன் மற்றும் சாத்தூர் நகர, வட்டார இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மக்கள் விரோத பாஜ அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சேத்தூர் பேருந்து நிலையம் முன்பு நகர மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சேத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் நச்சாடலிங்கம் தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சாமி முன்னிலை வகித்தார். நகர பொருளாளர் நீராவி பாண்டியன், செயலாளர் சங்கரபாண்டியன் உட்பட நகர, வட்டார, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: