×

ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேக விழா

நாமகிரிப்பேட்டை, மார்ச் 28: நாமகிரிப்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலில், கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில், நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் சென்னை, பெங்களூரு, மதுரை, திருச்சி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு, ஆஞ்சநேயர் கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆஞ்சநேயர் கோயில் விழாக்குழு தலைவர் அத்தியப்பக்கவுண்டர், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, முன்னாள் எம்பி., சுந்தரம், முத்துவேல் ராமசுவாமி, இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் கீதாமணி, கோயில் செயல் அலுவலர் செந்தில்ராஜா, உதவி ஆணையர் இளையராஜா மற்றும் திருப்பணி குழுவினர் ரமேஷ்குமார், மணிமுருகேசன், பாலு, பிரகாஷ், ஜெயக்குமார், செல்வராஜ், சித்ராசரவணன், ரவீந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Anjaneyar Temple ,
× RELATED குடும்பம் தழைக்க வீர ஆஞ்சநேயர்