×

திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஊஞ்சல் உற்சவம்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் பிரசித்திபெற்ற முள்ளாட்சி மாரியம்மன் கோயில் 79 ஆம் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 5ம்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கிநடைபெற்று வருகிறது ஒவ்வொருநாளும் உபயதாரர்கள் சார்பில் சிறப்பு வாகனத்தில் சாமிவீதியுலா நடைபெற்றது. கடந்த 19ம்தேதி முக்கிய திருவிழாவில் தீமிதி திருவிழாவும் 21ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற்றது.நேற்று முன்தினம் இரவு திருத்துறைப்பூண்டி மலர் வணிக வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அம்மனுக்கு விடையாற்றி உற்சவ மண்டகப்படி நடைபெற்றது. இரவு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் அதனை தொடர்ந்து ஊஞ்சலில் அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அமர்ந்து அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சோமசுந்தரம் மேற்ப்பார்வையில் இன்ஸ்பெக்டர் கழினியப்பன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று சர்வபிராயசித்தாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

Tags : Thiruthurapoondi ,Mullakshi Mariamman Temple Festival ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை