×

வைத்தீஸ்வரன்கோயிலில் கார்த்திகை வழிபாடு பக்தர்கள் சுவாமி தரிசனம்

சீர்காழி: வைத்தீஸ்வரன்கோயிலில் நடைபெற்ற கார்த்திகை வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகி அம்பாள் வைத்தியநாத சுவாமி உடனாகிய திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் 18 சித்தர்களில் முதன்மையான தன்வந்திரி சித்தர் இக்கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். கோயிலில் அமைந்துள்ள சித்தாமிர்த தீர்த்த குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்தால்4448. நோய்கள் தீரும் என்பது ஐதீகம் இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் பங்குனி மாத கார்த்திகை விழாவை முன்னிட்டு செல்வ முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானையுடன் கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினார் அப்போது தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Tags : Vaideeswaran temple ,Swami ,
× RELATED சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் கார்த்திகை வழிபாடு