நுகர்பொருள் வாணிப கழகம் தகவல் திருவாரூர் மாவட்ட புத்தக திருவிழாவில் கலெக்டர் பேச்சு பெற்றோர் வலியுறுத்தல் திருவாரூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

திருவாரூர்: திமுகவின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூர் கட்சி அலுவலகத்தில் நேற்று மாவட்ட அவை தலைவர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ அசோகன்,மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட பொருளாளர்வெங்கடேசன், துணை செயலாளர்கள் கார்த்திக், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், எம். எல். ஏ.வுமான பூண்டி கலைவாணன் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். இதில்முன்னாள் எம்எல்ஏக்கள் குத்தாலம் கல்யாணம், ஆடலரசன் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து ஒன்றிய, நகர, பேரூர் கழகசெயலாளர்கள், பொதுக்குழு மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் வரும் ஜூன் 3 ம்தேதி துவங்க உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி திருவாரூர் காட்டூரில் நடைபெறும் கலைஞர் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து வரும் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க ஏற்பாடு செய்வது, அடுத்த மாதம் 4ம் தேதி திருவாரூர் வருகை தரும் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, கட்சியின் முன்னாள் மாவட்ட அவை தலைவரும், கலைஞரின் நெருங்கிய நண்பருமான மறைந்த தென்னனின் நூறாவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது,தலைமை கழகம் அறிவித்துள்ளவாறு தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக திருவாரூர் நகர செயலாளர் வாரைபிரகாஷ் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா நன்றி கூறினார்.

Related Stories: