×

புதிய உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட வேண்டும் கோ.தளபதி எம்எல்ஏ பேச்சு

மதுரை: மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் பசுமலையில் உள்ள திருமண மண்டபத்தில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் ஒச்சுபாலு தலைமை வகித்தார். நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்முத்துராமலிங்கம், தணிக்கைக்குழு உறுப்பினர் வேலுச்சாமி, உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் குழந்தைவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ பேசுகையில், ‘தமிழ் இனத்தலைவர் கலைஞர் நூற்றாண்டுவிழாவை திமுக மட்டுமல்லாமல் மதுரை மாநகர் மாவட்ட மக்களின் நாளாக கொண்டாடப்பட வேண்டும். முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளில் இருந்து தேர்தல் களம், வெற்றிப்பாதையை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. நமது திட்டமிட்ட தேர்தல் பணியே அதற்கு காரணம். தேர்தலில் முக்கியமானது பூத் கமிட்டிகளின் செயல்பாடுகள் தான். ஒவ்வொரு வட்டக்கழகமும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் படிவங்களை புகைப்படத்துடன் பூர்த்தி செய்து மாநகர் மாவட்ட அலுவலகத்தில் விரைந்து சமர்ப்பிக்க வேண்டும்.

திமுக உறுப்பினர்கள் எனும் படைவீரர்களின் எண்ணிக்கையை கூட்ட வேண்டியது மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், செயல்வீரர்களின் கடமையாகும். மாநகர் திமுக எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும்’ என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் சின்னம்மாள், ராகவன், மூவேந்திரன், மாவட்ட பொருளாளர் முருகவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தனசெல்வம், ஆறுமுகம், மாநகராட்சி மாமன்றக்குழு தலைவர் ஜெயராம், மாநில விவசாய அணி துணை செயலாளர் கணேசன், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலாளர் வீரகணேசன், மண்டலத்தலைவர்கள் முகேஷ்சர்மா, சரவண புவனேஷ்வரி, பாண்டிச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் வைகைபரமன், மாமன்ற பொருளாளர் காவேரி, பகுதி செயலாளர்கள் சுதன், தவமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : MLA ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை