×

புதுக்கோட்டை கந்தர்வகோட்டை பகுதியில் தைலமர காட்டில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதிகளில் தைல மர காட்டில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை சாலை, வட்டாட்சியர் அலுவலகம் அருகே கந்தர்வகோட்டையைச் சேர்ந்த ராமநாதன் மகன் பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் தைல மரத்தோட்டம் தீ விபத்துக்குள்ளானது. இதேபோல் கந்தர்வகோட்டை கறம்பக்குடி சாலையில் உள்ள நடராஜன் மகன் முருகையன் என்பவருக்கு சொந்தமான தைல மரத்தோட்டத்திலும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்துக்குறித்து, கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடங்களுக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீணை அணைத்தனர். தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்த வீரர்களை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்.

Tags : Thylamara forest ,Kandarvakottai ,Pudukottai ,
× RELATED கந்தர்வகோட்டை பகுதியில் இயற்கை தொழு உரமிடும் விவசாயிகள்