×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 2,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,500 கனஅடியாக சரிந்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1711 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1260 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 103.19 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 103.15 அடியானது. நீர் இருப்பு 68.98 டி.எம்.சியாக உள்ளது.

Tags : Mettur Dam ,
× RELATED தரிசாக கிடக்கும் ஆற்றுப்பாசன வயல்கள்...