×

உலக வன நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் திட்டம் மேயர் ஜெகன்பெரியசாமி துவக்கி வைத்தார்

தூத்துக்குடி, மார்ச் 22: உலக வன தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், பேரிடர்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும் அதிகளவில் நாட்டு மரங்களை நட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி உலக வன தினமான நேற்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடக்கு மண்டலத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் துணை ஆணையர் குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் நாகேஸ்வரி, வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி அதிகாரிகள் பிரின்ஸ், தனசிங், அரிகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mayor ,Jaganperiyasamy ,World Forest Day ,
× RELATED நாய் கடித்த சிறுவனிடம் நலம்...