- தூத்துக்குடி விஸ்வபுரம்
- மேயர் ஜெகன்பெரியசாமி
- தூத்துக்குடி
- நகராட்சி கழகம்
- மேயர்
- ஜெகன் பெரியசாமி
- விஸ்வபுரம்
- தூத்துக்குடி மாநகராட்சி கழகம்
தூத்துக்குடி, ஜூலை 12: தூத்துக்குடி விஸ்வபுரம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் சாலை, கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால், பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் தெற்கு புதுத்தெரு, விஸ்வபுரம், குறிஞ்சிநகர், ஆகிய பகுதியில் புதிதாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் ஞானமார்ட்டின், அதிமுக பிரமுகர் சகாயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post தூத்துக்குடி விஸ்வபுரத்தில் மழைநீர் வடிகால் பணிகள் மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு appeared first on Dinakaran.