×

சின்னாளபட்டியில் பேரூராட்சியில் குப்பைகளை கொட்ட கூடுதல் இடம் தேர்வு செய்ய முடிவு: மாதாந்திர கூட்டத்தில் தீர்மானம்

நிலக்கோட்டை, மார்ச் 21: சின்னாளப்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. மன்ற தலைவர் பிரதீபா கனகராஜ் தலைமை வகிக்க, செயல் அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். துணை தலைவர் ஆனந்தி பாரதிராஜா வரவேற்றார். கூட்டத்தில் சின்னாளபட்டி பேரூராட்சியில் உயர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அதிகரித்து வரும் குப்பைகளுகளை கொட்ட கூடுதல் இடம் தேர்வு செய்தல், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜீரோ சதவீதம் நெகிழி பைகளை ஒழித்தல், பஸ் நிலையத்திலுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை புதுப்பொலிவு பெற செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றபட்டது. இதில் கவுன்சிலர்கள் அமல்ராஜ், ஜெயக்கிருஷ்ணன், ஹேமலதா, சாந்தி, செல்வி, ரவிக்குமார், காமாட்சி, வேல்விழி, சங்கரேஷ்வரி, செல்வகுமாரி, தாமரைச்செல்வி, சுகாதார ஆய்வாளர் கணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தலைமை எழுத்தர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.

Tags : Chinnalapatti ,
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...