×

பழநி கணக்கன்பட்டியில் மருத்துவ முகாம்

பழநி, மார்ச் 21: பழநி அருகே கணக்கன்பட்டியில் கொரமண்டல் உர நிறுவனம் மற்றும் அரிமா சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. உர நிறுவனத்தின் பொது மேலாளர் சிவசங்கரன் தலைமை வகித்தார்.    கணக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் ஆறுமுகம் துவக்கி வைத்தார். முகாமில் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சல், சளி, இருமல், கை- கால் வலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மாத்திரை, மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags : Palani Kaspanbari ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு