கோபால்பட்டி, மார்ச் 21: சாணார்பட்டி அருகே நொச்சிஓடைப்பட்டியில் உள்ள அனுகிரகா சமூக அறிவியல் கல்லூரியின் சமூக பணித்துறை மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் சமூக பணி துறை சார்பில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. அனுகிரகா சமூக அறிவியல் கல்லூரியில் நடந்த கருத்தரங்கிற்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் காணிக்கை சுவாமி தலைமை வகித்தார். கல்லூரியின் சமூக பணித்துறை துணை தலைவர் மரியலூயிஸ் வரவேற்றார்.
கல்லூரி செயலாளர் ஜார்ஜ் பெர்னாட்ஷா, முதல்வர் ஐசக், முன்னாள் தலைவர் சத்யன் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். சிறந்து விருந்தினராக மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு ஜாய் ஆப் சர்வீஸ் விருது வழங்கி கவுரவப்படுத்தினார். நிகழ்ச்சியை பேராசிரியர் வில்லியம்ஸ், காயத்ரி, பாபி மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் சேகர் நன்றி கூறினார்.
