×

சித்தர் கோயிலில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

ராசிபுரம், மார்ச் 21: ராசிபுரம் அத்தனூர் அருகே சித்தர் கோயிலில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்தனூர் வன விரிவாக்கம் மையம் சாலையோரத்தில், கொங்கணசித்தர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 19ம் தேதி இரவு பூசாரி செல்வராஜ்(60). என்பவர் பூஜைகளை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை பூசாரி, கோயிலுக்கு சென்று பார்த்த போது, சித்தர் சிலைகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. கொங்கணசித்தர் கோயிலின் கருவறையை சுற்றி பாம்பாட்டி சித்தர், போகர் மற்றும் அகத்தியர் என மொத்தம் 3 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு, கோயிலின் சுற்றுப்புற சுவருக்கு வெளியே, வனப்பகுதியில் விசி சென்றது தெரியவந்தது. மேலும் குடிநீர் குழாய்களையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாகிகள், வெண்ணந்தூர் போலீஸ் ஸ்ேடஷனில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Siddhar Temple ,
× RELATED சித்தர் கோயிலில் அமாவாசை வழிபாடு