×

குத்தாலம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மல்லியம், மங்கைநல்லூர், அசிக்காடு, நச்சினார்குடி, தேரழந்தூர், கண்டபுரம், கோனேரிராஜபுரம், திருவாலங்காடு, திருவாவடுதுறை, கோமல், பாலையூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை மற்றும் லேசான மழையானது நேற்று மாலை தொடங்கி தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த மழையினால் வாகனங்களில் செல்வோர் மழையில் நனைந்தும் மற்றும் கட்டிட வேலைகள், விவசாயப் பணிகள், செங்கல் சூலைகள், நெல் அறுவடை பணிகள் என அன்றாட பணிகளை செய்பவர்களுக்கு இடையூறாகவும் இந்த மழை பெய்தது.  இதேபோன்று மழையானது விட்டு விட்டு தொடர்ந்து பெய்து வந்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Guttalam ,
× RELATED குத்தாலம் அருகே சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்