பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பந்தலூர், மார்ச் 20 :  பந்தலூர் அருகே தேவாலா பஜாரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பந்தலூர் அருகே தேவாலா பஜாரில் காங்கிரஸ் கட்சி நெல்லியாலம் நகரம் சார்பில் ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லியாளம் நகரதலைவர் ஷாஜி தலைமை வகித்தார். கேஸ் சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில், பொதுக்குழு உறுப்பினர்  கோபிநாதன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஈஸ்வரன், கோவிந்தராஜ், தங்கச்சன், சோனியா, ஜெலில், அனீஸ், பிரபு, சௌகத், சந்திரன், உமர், சந்தனசாமி அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: