×

சாலையை கடக்கும் காட்டு யானைகள் பெரிய மாரியம்மன்கோயில் திருவிழா பந்தல் அமைக்கும் பணி தொடக்கம்

ஈரோடு, மார்ச்20: ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில் திருவிழாவுக்காக பந்தல் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில் குண்டம் தேர்த்திருவிழா வரும் நாளை (21ம் தேதி) பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. வருகின்ற 25ம் தேதி கம்பம் நடுதலும், 30ம் தேதி கொடியேற்றமும் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 4ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், 5ம் தேதி பொங்கல் விழா மற்றும் தேரோட்டமும் நடைபெற உள்ளது. 8ம் தேதி கம்பம் எடுத்தலும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்க உள்ளது.

இத்திருவிழாவுக்காக மீனாட்சிசுந்தரனார் சாலையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே இருந்து மாநகராட்சி தலைமை அலுவலகம் வரை சாலையின் இரு புறத்திலும் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. பந்தல் அமைக்கும் பணி நிறவைடைந்ததும் 37 பெரிய கடைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை, பிரசாதம் வழங்கும் இடம் போன்றவை அமைக்கப்படும். பந்தல் அமைக்கும் பணி 5 நாட்களில் நிறைவடையும் என்றும் அதன்பிறகு கடைகள் ஒதுக்கீடு பணி மேற்கொள்ளப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Big Mariammankoil festival ,
× RELATED வில்லரசம்பட்டியில் நாளை மின்நிறுத்தம்