×

ஜெயில் ஹில் செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊட்டி, மார்ச் 19: ஊட்டியில் உள்ள தாசில்தார் அலுவலகம் செல்லும் சாலை பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டியில் உள்ள ஜெயில் ஹில் பகுதியில் தாசில்தார் அலுவலகம், பதிவுத்துறை அலுவலகம், நீதித்துதறை நடுவர் நீதிமன்றம், கிளை சிறைச்சாலை உட்பட ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு நாள் தோறும் ஏராளமான மக்கள் வந்துச் செல்கின்றனர். இந்நிலையில், இந்த அலுவலகங்களுக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. சில இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் இச்சாலை பழுதடைந்து சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதில், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. பலர் பள்ளங்களில் தவறி விழுகின்றனர். குறிப்பாக, அரசு அலுவலகங்களுக்கு செல்லும் வயதானவர்கள் இச்சாலையில் நடக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இச்சாலையை நகராட்சி நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Jail Hill ,
× RELATED கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை மகசூல் அதிகரிப்பு