கவரப்பாளையத்தில் முஷ்ணம் பூவராக சுவாமி மாசி மக உற்சவம்

ஆண்டிமடம்,மார்ச்19:  முஷ்ணம் பூவராகசுவாமி மாசி மகப் பெருவிழாவின் ஒருபகுதியாக கவரப்பாளையம் கிராமத்தில் தங்கதோளிக்கினியாலில் சாமி வீதி உலா, சிறப்பு திருமஞ்சனமும் இரவு முத்துப்பள்ளக்கில் வீதி உலாவும் நடைபெற்றது.உலக புகழ்பெற்ற வைனவ ஸ்தலமும் பெருமாளின் பத்து அவதாரங்களில் ஒன்றான, பன்றி முகத்துடன் உள்ள வராக அவதாரம் எடுத்த ஸ்தலம் முஷ்ணம்; பூவராகசுவாமி கோவில் ஆகும். அரியலூர் மாவட்டத்தின் எல்லையில். கடலூர் மாவட்டம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தொன்று தொட்டு பிரசித்திபெற்ற மாசிமக உற்சவம் நடந்துவருகிறது. அதேபோல் இந்தவருடம் கடந்த மாதம் 26 ம் தேதி மாசிமக உற்சவம் கொடியேற்றப்பட்டு. தொடர்ந்து தினமும் காலை பூவராகசுவாமி பல்லாக்கில் வீதி உலா புறப்பாடும். மாலையில் தினமும் ஒரு வாகனமாக, தங்க கருட வாகனம், நாக வாகனம், அனுமார் வாகனம், சூரியபிரை வாகனம், என்று 17 ம் தேதி வரை மாசி உற்சவம் நடந்தது.

இதைதொடர்ந்து சிதம்பரம,புவனகிரி, குமாரகுடி, பாளையங்கோட்டை, ராமாபுரம் வழியாக முஷ்ணம் பூவராகவசாமி சுமார் 150 கிலோமீட்டர். 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக, ஆண்டிமடம் அருகே கவரப்பாளையத்திற்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை முஷ்ணம் பூவராகவசாமி வந்தடைந்தார். கவரப்பாளையம் கிராம நாட்டாமைகள் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து நேற்று காலை பூவராகசுமி தங்கதோளிக்கினியாலில் எழுந்தருளி கவரப்பாளையம் கிராமத்தில் அனைத்து தெருக்களிலும் வீதி உலா நடைபெற்றது. இதைதொடர்ந்து பால், தயிர், இளநீர், மஞ்சள் போன்ற அபிஷேக பொருட்களைகொண்டு சிறப்பு திருமஞ்சனமும், பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரத்துடன் மஹா தீபாராதனை நடந்தது. இரவு முத்துப்பல்லக்கில் மேளதாளத்துடன் வாணவேடிக்கை, நாட்டுப்புற கலைகளான குறவன் குறத்தி ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்கால்; குதிரை ஆட்டத்துடன் வீதிஉலா நடைபெற்றது. இதில் கவரப்பாளையம், ஆண்டிமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பக்தர்கள் கலந்துகொண்டு சாமி சாமி தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து இன்று மாலை கவரப்பாளையம் கிராமத்தில் இருந்து முஷ்னத்திற்கு பூவராகசாமி புறப்பாடு நடைபெறும்.

Related Stories: