×

காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

போடி, மார்ச் 18: போடி அருகே டொம்புச்சேரி கிராமத்தில் உள்ள சாலிமரத்துப்பட்டியில் போடி வட்டார காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக் கூட்டம் போடி வட்டார காங்கிரஸ் தலைவர் ஜம்புசுதாகர் தலைமையில் நடைபெற்றது. வட்டார துணைத் தலைவர்கள் சாந்தி, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் அருணா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்டத் துணைத்தலைவர் சன்னாசி, கம்பம் வட்டாரத் தலைவர் ராசா முகமது, தேனி வட்டாரத் தலைவர் கோபிநாத், போடி நகரத் தலைவர் முசாக் மந்திரி ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில், சாலிமரத்துப்பட்டியில் குடிநீர் சப்ளையை சீராக்க வேண்டும், போடி மற்றும் தேனிக்கு சென்று வர போ க்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதுள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் முனியாண்டி, பெருமாள், கடல் பிரபு, எஸ்சி,எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் இனியவன், கோபி, ராஜாராம், திலகர், அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பொதுக்குழு உறுப்பினர் ராஜவேல் நன்றி கூறினார்.

Tags : Congress ,
× RELATED திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை...