×

தேனி மாவட்டத்தில் கரம்பை மண் முறைகேடுகளை தடுக்க சிறப்பு தனிதாசில்தார் நியமிக்கப்பட வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

உத்தமபாளையம், மார்ச் 18: தேனி மாவட்டத்தில் கரம்பை மண் அள்ளும்போது நடக்கும் முறைகேடுகளை தடுக்க சிறப்பு தனிதாசில்தார் நியமிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். தேனி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உத்தமபாளையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் இருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு: கம்பம் கே எம் அப்பாஸ் (விவசாய சங்க தலைவர்): பெரியாறு அணை மூலமாக ஐந்து மாவட்டங்கள் பயன்படுகின்றன. பெரியாறு செல்லும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளால் குறுகலாக உள்ளது. இந்7த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். கண்ணன் (விவசாயி): தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு கோடை காலங்களிலும் வனப்பகுதி கொழுந்துவிட்டு எரிகிறது. எனவே ஒவ்வொரு கோடை காலங்களுக்கு முன்பும் தீ பரவாமல் தடுக்கிற புதிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை என்பது மிகவும் அவசியம்.

தேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கண்மாயிகள், குளங்களில் கரம்பை மண் அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு இலவசமாக அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இதனை முறைகேடாக பயன்படுத்துகிற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குறிப்பாக விவசாயிகள் போர்வையில் இடைத்தரகர்கள் உள்ளே நுழைந்து இதனை வணிக நோக்கத்தோடு பயன்படுத்தி விற்பனை செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே, இதற்காக தனி தாசில்தார் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு குளங்கள், கண்மாய்களையும் கண்காணிக்க வேண்டும். இரவு நேரங்களில் கண்மாய் - குளங்களில் மண் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும், என்றார்.

ராமராஜ் (18ம் கால்வாய் விவசாய சங்க தலைவர்): கோம்பை பாப்பு குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாண்டியன் (விவசாய சங்க தலைவர்): தேனி மாவட்டத்தில் வெங்காயம் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். கலெக்டர்: உங்களது கோரிக்கைகள் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கரம்பை மண் அள்ள யாருக்கும் பணம் தர வேண்டியதில்லை, என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : Tahsildar ,Garambai ,Theni ,Kradithir ,
× RELATED நச்சுக்காற்றால் பொதுமக்கள் பாதிப்பு;...