×

திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் இ சேவை மைய பணிகள் கலெக்டர் ஆய்வு

திருவாரூர், மார்ச்18: திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தினை மாவட்ட கலெக்டர் சாரு நே ற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையத்தினை மாவட்ட கலெக்டர் சாரு பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு தினந்தோறும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், இ- சேவை மையத்திற்கு வருகை புரிந்தவர்களிடம் மையத்தில் வழங்கப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்து, இ-சேவை மைய ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு அவர்களுக்கு தேவையான பணிகளை உடனடியாக செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் சமூக பாதுகாப்பு திட்டம், வட்டவழங்கல் அலுவலகம், தனிவட்டாட்சியர் (ஆதிதிராவிடர் அலுவலகம்), நகர நிலவரி திட்டஅலுவலகம் ஆகிய அலுவலகங்களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு உடனடியாக அவர்களுக்கு தேவை யான சேவைகளை வழங்குமாறு அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tiruvarur ,
× RELATED வலங்கைமானில் பத்தாம் வகுப்பு...