ஆண்டிபட்டி, மார்ச் 17: ஆண்டிபட்டியில் வட மாநிலத்தை சேர்ந்தரை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பால் என்பவரது மகன் முஸ்கான்(17). இவர் தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் தங்கியிருந்து, வைகை அணை சாலை பிரிவில் பானி பூரி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் கடையை திறந்து முஸ்கான் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அங்கு வந்த ஆண்டிபட்டி நாடார் தெரு பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் அனந்தகுமார் பானி பூரி தரும்படி முஸ்கானிடம் கூறியுள்ளார். ஆனால், பானி பூரி தயார் செய்ய காலதாமதமானதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார், முஸ்கானை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில், ஆண்டிபட்டி போலீசார் அனந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். வடமாநிலத்தை சேர்ந்தவரை வாலிபர் தாக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
