×

கால்நடை மருத்துவ முகாம்

காளையார்கோவில், மார்ச் 17: காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள கொல்லங்குடி கால்நடை மருந்தகம் சார்பில் மேப்பல் கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கோடை காலங்களிலும், மழை காலங்களிலும் மாடுகளுக்கு பரவும் வாய் காணை, கால் காணை நோயிலிருந்து தடுப்பதற்காக கோமாரி நோய் (காணை) தடுப்பூசி போடப்பட்டது.

இம்முகாமில் கொல்லங்குடி கால்நடை மருந்தகம் உதவி மருத்துவர் ரஹமத், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பாண்டியன், ஆவின் காமராஜ் ஆகியோர் 100க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் சென்னை மண்டல கால்நடை நோய் தடுப்பு மையம் உதவி இயக்குநர் மருத்துவர் ராஜாராம், சிவகங்கை கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் மருத்துவர் ராம்குமார் ஆகியோர் கோமாரி நோய் தடுப்பூசியை ஆய்வு செய்தனர்.

Tags : Veterinary Camp ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை