×

வெலிங்டன் கண்டோன்மென்ட் தேர்தலில் போட்டி: திமுகவினரிடம் நேர்காணல்

ஊட்டி, மார்ச் 17:  வெலிங்டன் கண்டோன்மென்ட்  நகரியத்திற்கு உட்பட்ட வார்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேற்று ஊட்டியில் நேர்காணல் நடந்தது. வெலிங்டன் கண்டோன்மென்ட் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்தவர்களிடம் மாவட்ட திமுக செயலாளர் முபாரக் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு  சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

அப்போது, விருப்ப மனு அளித்தவர்களிடம் கண்டோன்மென்ட் தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்ச்செல்வன், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதகத்துல்லா, செல்வம், ஷீலா கேத்ரின், முரசொலி வெங்கடேஷ், நகரிய செயலாளர் மார்ட்டின், ஜெகதளா பேரூர் செயலாளர் சஞ்சீவ்குமார் மற்றும் குன்னூர் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : Wellington Condonment Election ,Timuvinear ,
× RELATED திட்டுக்கல் சாலையை சீரமைக்க கோரிக்கை