×

(தி.மலை-விளம்) முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் போளூர் மத்திய ஒன்றிய திமுக சார்பில்

போளூர், மார்ச் 17: போளூர் ஒன்றிய மத்திய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த விழா கேளுர், பால்வார்த்துவென்றான், விளாங்குப்பம், சந்தவாசல், ஏரிக்குப்பம் ஆகிய கிராமங்களில் கட்சி கொடியேற்றி நலதிட்ட உதவிகள் வழங்கி கெண்டாடப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் எ.எம்.காசி தலைமை தாங்கினார். களம்பூர் பேருராட்சி தலைவர் கே.டி.ஆர்.பழனி, ஒன்றிய அவை தலைவர் வி.பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் ஜெ.மணிகண்டன் வரவேற்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 5 கிராமங்களில் ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன் கட்சி கொடியேற்றி இனிப்பும், அன்னதானமும் வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் பேனா, பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய துணை செயலாளர்கள் பி.சுகுமார், எம்.அமுதாமூர்த்தி, ஆர்.குமார், மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.கோபி, கா.ஐயப்பன், எம்.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ்.விநாயகமூர்த்தி நன்றி கூறினார்.

Tags : D.Malai-Vilam ,Chief Minister ,M.K.Stal ,Polur Central Union DMK ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...