×

நெல்லை பேட்டை ஐடிஐயில் மார்ச் 20ல் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

நெல்லை, மார்ச் 16: நெல்லை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மார்ச் 20ம் தேதி காலை 10 மணி முதல் 4 மணி வரை ெநல்லை  மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்க உள்ளதாக கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நெல்லை மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்ற  பயிற்சியாளர்கள், 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இதில்  மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த 70 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான இளைஞர்கள், இளம் பெண்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் பங்கேற்க உள்ள பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ், 10ம், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன்  கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களை நெல்லை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரே இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்’’ என்றார்.

Tags : ITI ,Nellie Petty ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை