×

அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை அவிநாசியில் ரூ.54 லட்சத்து 91 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம்

அவிநாசி: அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்று வருகிறது.  அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.54 லட்சத்து 91 ஆயிரத்துக்கு  பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.  இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, மொத்தம் 2765 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. சென்ற வாரத்தைவிட பருத்தி வரத்து அதிகரித்து இருந்தது.  இதில், ஆர்சிஎச் பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு  ரூ.7000 முதல் ரூ.8089 வரையிலும், கொட்டு ரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2000 முதல் ரூ.3500 வரையிலும் ஏலம் போனது. நேற்று பருத்தி ஏல மையத்தில் மொத்தம் ரூ.54 லட்சத்து 91 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், அவிநாசி,  புளியம்பட்டி, குன்னத்தூர், ஆத்தூர், மேட்டூர், கோபி, சத்தியமங்கலம், கொள்ளேகால், அந்தியூர், அத்தாணி, நம்பியூர், மலையப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து 498 பருத்தி விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 16 பருத்தி வியாபாரிகளும் பங்கேற்றனர்.


சீசனில் மட்டுமே கிடைக்கும் கள் என்பது அனைத்து நாட்களிலும் கிடைக்கும் பானம் கிடையாது. குறிப்பிட்ட சீசனில் மட்டுமே அது கிடைக்கிறது. குறிப்பாக பிப்ரவரி மாதம் முடியும் தருவாயில் அந்த சீசன் தொடங்குகிறது. அது மே மாதம் வரை செல்கிறது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் கள் நன்றாக கிடைக்கும். அதன்பிறகு அதன் சீசன் முடிவடைந்து மே மாதத்தில் இருந்து கள் இறக்குமதி படிப்படியாக குறையும். ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள தோப்புகளை பலரும் குத்தகைக்கு எடுத்து இந்த 3 மாதங்களில் மட்டும் கள் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பிட்ட குத்தகை காலம் முடிந்தபிறகு அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விடுகின்றனர். ஜக்கு 20 ரூபாய் ஆந்திர எல்லையில் விற்கப்படும் கள் ஒரு ஜக்கு ₹20 முதல் ₹25 வரை விற்கப்படுகிறது. இதில் ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு ₹20க்கும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ₹25க்கும் விற்கப்படுகிறது. அதுவே ஒரு குடமாக வாங்கினால் குடத்திற்கு ஏற்றார்போல் ₹400ல் இருந்து ₹600 வரை விற்கப்படுகிறது. தெலுங்கில் பேசினால் சற்று குறைவாகவும், தமிழில் பேசினால் சற்று அதிகமாகவும் விற்கப்படுவதாக கள் குடித்து வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.


ஆண், பெண் மரம் கள் இறக்கும்போது சிலர் அது எந்த மரத்துக் கள் என்று கேட்பார்கள். ஆண் மரமா? பெண் மரமா? என கேட்பார்கள். ஆண் மரக் கள் அதிக வீரியம் உள்ளதாகவும், பெண் மரக் கள் சற்று வீரியம் குறைவாக உள்ளதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். மேலும 41 நாட்கள் தொடர்ந்து ஆண்மரத்தின் கள்ளை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என சிலர் தெரிவிக்கின்றனர். இதனால் சிலர் ஆண் மரக் கள் மட்டுமே வேண்டும் என கேட்டு வாங்கி பருகி வருகின்றனர்.Tags : Charity department ,Avinasi ,
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு...