×

செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் அறங்காவலர் நியமன விண்ணப்பம் வழங்குதல் குறித்து ஆய்வுக்கூட்டம்

செய்யாறு, மார்ச் 15: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் அறங்காவலர் நியமன விண்ணப்பம் வழங்குதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் எம்எல்ஏ ஒ.ஜோதி தலைமையில் நேற்று மாலை நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்தூர் அருள்மிகு பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயிலில் அறங்காவலர் நியமன விண்ணப்பம் வழங்குதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி தலைமையில் நடந்தது.

மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.வி.சேகரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பாண்டுரங்கன் ஆகியோர் செய்யாறு தொகுதியில் உள்ள திருக்கோயில்கள் சம்பந்தமாக ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர்.

Tags : Seiyaru Vedapureeswarar temple ,
× RELATED செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் ரத...