×

சேலத்திற்கு காரில் கடத்திய ரூ.4.21 லட்சம் குட்கா பறிமுதல்

ஓசூர், மார்ச் 15: பெங்களூரில் இருந்து சேலத்திற்கு காரில் ரூ.4.21 லட்சம் குட்கா கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 352 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் இருந்தவரிடம் விசாரித்தபோது, ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டத்தை சேர்ந்த பலவந்த்ராம் (23) என்பதும், பெங்களூரில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து ரூ.4.21 லட்சம் மதிப்பிலான 352 கிலோ குட்கா, காரை பறிமுதல் செய்த போலீசார் பலவந்த்ராமையும் கைது செய்தனர்.

Tags : Salem ,
× RELATED சேலம் மாநகர் முழுவதும் ₹135 கோடியில் சாக்கடை கால்வாய்கள் சீரமைப்பு