×

சிவகாசி ஒன்றிய அரசு பள்ளிகளில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா


சிவகாசி: சிவகாசி ஒன்றியம் முழுவதிலும் ஒன்றிய திமுக சார்பாக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. அனுப்பன்குளம் ஊராட்சியில் அனுப்பன்குளம், பேராபட்டி, மீனம்பட்டி, ஆண்டியாபுரம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகளில் நேற்று தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளரும் சிவகாசி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான விவேகன்ராஜ் கேக், காரம் வழங்கினார்.

அனைத்து அங்கன்வாடி மையம் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கை கழுவும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் 8, 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபிகண்ணன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மஞ்சுநாத், நிர்வாகி கண்ணன், கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட திமுக இளைஞரணி சூரியநாராயணன் செய்திருந்தார்.

Tags : M.K.Stal ,Sivakasi Union Government Schools ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை