×

மதுரை அருகே கீழக்குயில்குடி சமணர் மலையில் உள்ள ேபச்சிப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள சிற்பங்கள் குறித்து விளக்கப்படுகிறது. ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வென்ற மதுரை மாணவர்கள் திருமங்கலம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

திருமங்கலம்: திருமங்கலம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெற்குமாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. திமுக தெற்குமாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுறுத்தலின்படி திருமங்கலம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் தனுஷ்கோடி முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சி தலைமை அறிவித்துள்ளபடி பூத்கமிட்டி அமைப்பது எனவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஒன்றியம் அளவில் கூட்டங்களை நடத்தி பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய துணைசெயலாளர்கள் கௌதம், பாரதி ராஜேஸ்வரி சந்திரன், பொருளாளர் கோபிநாத், மாவட்ட பிரதிநிதிகள் விஜயராஜன், ரஞ்சித்குமார், பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Yepachipallam ,Keezhakuilgudi Samanar Hills ,Madurai ,Tirumangalam ,East Union ,Executives ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை