தொப்பம்பாளையம் ஊராட்சியில் மஞ்சள் ரகங்கள் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கக் கூட்டம்

சத்தியமங்கலம்: பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொப்பம்பாளையம் ஊராட்சியில் மஞ்சள் ரகங்கள் சாகுபடி செய்வது குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. தொப்பம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நாகேந்திரன் தலைமை தாங்கினார். பவானிசாகர் உதவி தோட்டக்கலை அலுவலர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார்.  இதில் தனியார் வேளாண் கல்லூரி மாணவிகள் சிவரஞ்சனி, ச.சினேகா, ம.சினேஹா, சுபாஷினி, தமிழரசி,  தாரிகாதேவி,  துவித்ரா, வைஷ்ணவி, வித்யாம்பிகா,  விஷ்ணுபிரியா, விஸ்மயா சதானந்தன், விவின்கனிஷ்கா ஆகியோர் கலந்து கொண்டு மஞ்சள் ரகங்கள் என்னும் தலைப்பில் வேளாண்மை சம்பந்தமாக விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Related Stories: