×

முசிறி அருகே கல்லூரி மாணவன் மாயம்

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் டி. புதுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன்(42). இவரது மகன் முரளிதரன்(19). இவர் கண்ணனூர் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரியில் இருந்து திருச்சியில் ஒரு பயிற்சிக்காக சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை முருகேசன் ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவர் முரளிதரனை தேடி வருகின்றனர்.

Tags : Musri ,
× RELATED வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்ட...