×

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விராலிமலை: விராலிமலை தாலுகா அலுவலகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  விராலிமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு இலுப்பூர் கோட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார். விராலிமலை வட்ட கிளை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும், பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விராலிமலை வட்ட கிளை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Tamil ,Grama Administrative Officer ,Samiti ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை